Engae enadhu kavidhai Lyrics Kandukondain Kandukondain

Published by
Engae enadhu kavidhai
Kanavile ezhudhi
Maditha kavidhai.
Vizhiyil maraindhu
Vittadho ammammaa
Vidiyal alithu vittadho
Kavidhai thaedi thaarungal
Illai en kanavai
Meettu thaarungal
Engae enadhu kavidhai
Kanavile ezhudhi
Maditha kavidhai.
Maalai andhigalil
Manathin sandhugalil
Tholaindha mugathai
Manam thaedudhe.
Veyyil thaarozhugum
Nagara veedhigalil
Mayyal kondu
Malar vaadudhey
Megam sindhum
Iru thuli idaiveliyil
Thuruvi thuruvi
Unai thaedudhe.
Udayum nuraigalilum
Tholaindha kadhalani
Urugi urugi 
Manam thaedudhe.
Azhagiya thirumugam
Orutharam paarthaal
Amaidhiyil niraindhiruppen
Nuni viral kondu 
Orumurai theendu
Nooru murai
Irandhiruppen.
Pirai vandhavudan
Nila vandhavudan
Nila vandhadhendru
Ullam thullum.
Nizhal kandavudan
Nee endru indha 
Nenjam nenjam
Minnum.
Engae enadhu kavidhai
Kanavile ezhudhi
Maditha kavidhai.
Orey vaarthai ada
Orey paarvai ada
Orey thodudhal
Manam vendudhe
Muththam podum
Andha moochin  veppam
adhu nitham
Vendum endru vendudhey
Vervai pooththa
Undhan sattai
Vaasam indru ottum endru
Manam yaengudhe
Mugam poothirukkum
Mudiyil ondridandu
Kuththum endru
Manam yengudhe
Ketkudhey 
Paarayil seidhadhu
En manam endru
Thozhikku solliyirundhen
Paaraiyin idukkil
Vaervitta kodiyaai
Nee nenjil
Mulaithu vittaai.
Engae enadhu kavidhai
Kanavile ezhudhi
Maditha kavidhai.

எங்கே எனது கவிதை - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் Lyrics in Tamil

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை.

விழியில் மறைந்து விட்டதோ 
அம்மம்மா 
விடியல் அளித்து விட்டதோ

கவிதை தேடி தாருங்கள் 
இல்லை என் 
கனவை மீட்டு தாருங்கள்

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை.

மாலை அந்திகளில் 
மனதின் சந்துகளில் 
தொலைந்த முகத்தை 
மனம் தேடுதே.

வெய்யில் தாரொழுகும் 
நகர வீதிகளில் 
மையல் கொண்டு 
மலர் வாடுதே 

மேகம் சிந்தும் 
இரு துளி இடைவெளியில் 
துருவி துருவி உன்னை தேடுதே.

உடையும் நுரைகளிலும் 
தொலைந்த காதலனை 
உருகி உருகி மனம் தேடுதே.

அழகிய திருமுகம் 
ஒருதரம் பார்த்தல் 
அமைதியில் நிறைந்திருப்பேன்

நுனி விறல் கொண்டு 
ஒருமுறை தீண்டு 
நூறு முறை இறந்திருப்பேன் .

பிறை வந்தவுடன் 
நிலா வந்தவுடன் 
நிலா வந்ததென்று 
உள்ளம் துள்ளும்.

நிழல் கண்டவுடன் 
நீ என்று 
இந்த நெஞ்சம் 
நெஞ்சம் மின்னும்.

எங்கே எனது கவிதை 
கனவிலே எழுதி மடித்த கவிதை.

ஒரே வார்த்தை 
அட ஒரே பார்வை
அட ஒரே தொடுதல் 
மனம் வேண்டுதே 

முத்தம் போடும் 
அந்த மூச்சின் வெப்பம் 
அது நித்தம் வேண்டும் 
என்று வேண்டுதே

வேர்வை பூத்த 
உந்தன் சட்டை வாசம் 
என்று ஒட்டும் 
என்று மனம் ஏங்குதே 

முகம் பூத்திருக்கும் 
முடியில் ஒன்றிரண்டு குத்தும் 
என்று மனம் ஏங்குதே
கேட்குதே

பாறையில் செய்தது 
என் மனம் என்று 
தோழிக்கு சொல்லியிருந்தேன்

பாறையின் இடுக்கில் 
வேர்விட்ட கொடியாய் 
நீ நெஞ்சில் முளைத்து 
விட்டாய்.

எங்கே எனது கவிதை
கனவிலே எழுதி மடித்த கவிதை.